×

ராசிபுரத்தில் கழிவுநீர் தேங்கியுள்ள ராஜா வாய்க்காலை தூர்வார வலியுறுத்தல்

ராசிபுரம் : ராசிபுரம் ஏரியின், ராஜா வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ராசிபுரம் – சேலம் சாலை அருகே சுமார் 82 ஏக்கர் பரப்பளவில் ராசிபுரம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் போத மலையில் இருந்து வரும் மழைநீர் பல்வேறு ஓடை, குட்டைகள் நிரம்பி ராசிபுரம் ஏரியை வந்தடையும். கடந்தாண்டு பெய்த தொடர் மழையால் ஏரி நிரம்பி, நீர் வெளியேறியது.

ஆனால் நீர் வெளியேறக் கூடிய ராஜா வாய்க்கால் முற்றிலும் புதர் மண்டி, ஆக்கிரமிப்பு மற்றும் பல்வேறு இடையூறு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் 42 அடி அகலம் கொண்டுள்ளது. தற்போது புதராக காணப்படுகிறது. மேலும் ராசிபுரம் நகராட்சி எல்ஐசி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொசு உற்பத்தி கூடாரமாக மாறி வருகிறது. மேலும் விஷ ஜந்துகளும் படையெடுத்து வருகிறது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ராசிபுரம் ஏரியில் இருந்து வரும் ராஜா வாய்க்கால் முற்றிலுமாக பல்வேறு நபர்களால் ஆக்கிரமிப்பினால், மழைநீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் வெளியேற முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதியில் பல வாரங்களாக மழைநீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ராஜா வாய்க்காலின் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post ராசிபுரத்தில் கழிவுநீர் தேங்கியுள்ள ராஜா வாய்க்காலை தூர்வார வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Raja Vaikal ,Rasipuram ,Raja ,Vaikal ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...